
நீ நல்லதே செய்தலும்
நாளை உன்னை மறந்து விடுவார்கள் ...
எனினும் நல்லவனாய் இரு !!!
நாளை உன்னை மறந்து விடுவார்கள் ...
எனினும் நல்லவனாய் இரு !!!
உண்மையாய் நீ இருந்தாலும்
உலகம் உன்னை ஏமாற்றலாம் ...
எனினும் உண்மையாக இரு !!!
உலகம் உன்னை ஏமாற்றலாம் ...
எனினும் உண்மையாக இரு !!!

நீ அள்ளி கொடுத்தாலும்
அவர்கள் அதிருப்தி காணலாம் ...
எனினும் வள்ளலாய் இரு !!!
கனிவோடு நீ இருந்தாலும்
கயவன் என்று குறை கூறலாம் ...
எனினும் கனிவாய் இரு !!!

மனநிறைவோடு நீ இருந்தாலும்
மற்றவர்கள் பொறாமை கொள்ளலாம் ...
எனினும் மனநிறைவோடு இரு !!!வாழ்க்கை என்பது
நீ சாகும் வரை அல்ல ...
பிறர் மனதில்
நீ வாழும் வரை ...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2011 !!!