Sunday, September 18, 2011

அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன?


கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்


இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது....
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.




இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.



திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.



இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:



1.
இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.



2.
ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.



3.
கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்

பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.



4.
நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.



5.
இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்

இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.



இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.

Sunday, August 28, 2011

கடவுள் வாழ்த்து...

எதையுமே கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுதானே மரபு!இதோ--

”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா !”

நான் கேட்டுவிட்டேன்,கடவுள் என்ன சொல்கிறார்?!-----இதோ

உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!


நன்றி : இராசாராம்...

Friday, July 29, 2011

பெரியார் பிறந்திராவிடில் ....

பார்ப்பனீய வேதாளம் வர்ண விக்ரமாதித்தன் தலையில்
நிரந்தரமாய் அமர்ந்து கொண்டிருக்கும் ...

சாலை கற்களெல்லாம் சாமிகளாகி
வாழ்க்கை போக்குவரத்தை விபத்துக்குள்ளாக்கும்...

பொறுக்கிக்கும் விலை மாதிற்க்கும் பிறந்தவர்கள்
மலத்திற்கிணையாய் மனிதனை மதித்திருப்பார்கள்...

IIT IIM ல் மட்டுமல்ல
எங்கும் இட ஒதுக்கீடு எட்டாக் கனியாயிருக்கும் ...

திருமணம் என்ற பெயரில்
பெண் வீட்டாரின் இரத்தம் உறிஞ்சப்பட
சுய மரியாதை இணைகள் கனவாயிருக்கும் ...

கற்பெனும் பெயரில் தோழிகள் வாழ்க்கை
கல்வி , கேள்வி ,கனவுகளின்றி
சமையலறைக்கும் படுக்கையறைக்குமிடையே
நடைபிணமாய் உறைந்திருக்கும் ...

விதி ,விதவை என்ற பெயர்களில்
விரும்பா வாழ்க்கை ரணமாய் வலிக்கும் ...

எழுத்து சீர்திருத்தங்களின்றி
சீக்காளியாய் தமிழ் சிதைந்திருக்கும் ...

சமஸ்கிருதமும் இந்தியும் விழிகளாக
குடல் வாலாய் தமிழ் குன்றிப் போயிருக்கும்

தமிழில் எழுதுவது போய்
பாலர் வகுப்பே இந்தியில் தாம் நடைபெறும்

தேசம் தேசியம் என்ற போர்வைகளில்
இன உணர்வற்ற தமிழன் தும்முவதற்க்கும்
காவடி எடுத்துக் கொண்டிருப்பான் தில்லிக்கு ...

பொதுமை கூடங்கள் சாத்திய மற்று
பட்டினி சாவுகள் தமிழகத்தை அலங்கரிக்கும் ...

கிராமத்தில் கள்ளுக் கடை போய்
கள்ளுக் கடையில் கிராமம் இருக்கும் ...

ராகுவும் கேதுவும் எமகண்டமும்
நிகழ் காலத்தை உதிர்கால மாக்கும் ...

மொத்தத்தில் தோழர் பிறந்திராவிடில்
94 வருடங்கள் தமிழன் பின் தங்கியிருப்பான் ...

-----நன்றி : இராசா ராம் -------

Wednesday, July 13, 2011

விலைமாது(A) ....[படித்ததில் பிடித்தது]

தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி
என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு
கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....

அவன் முயன்று முன்னேற
அவள் முனங்கிப் பின்வாங்கினாள்.

மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே
நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல்
அவசியம் இல்லை...

ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம்
நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.

அவன் கலைமகன்.
அவள் விலைமகள்.

கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி
காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை
ஆக்கியவள் அவள்.

நாற்பதை தொட்டவன் அவன்.
இலக்கியம் இறுமாப்பு இரண்டும்
இரு கண்கள் அவனுக்கு...
குடும்பம்,பொறுப்பு போன்ற
இமைகள் கிடையாது..

பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத
வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த
"ஒரு மணி நேர மனைவி"- இவள்

ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்..
பேனா புத்தி அது
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும்
நிர்வாணமாய் இருந்தது......

புகைக்க தொடங்கினான்.
அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது
அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள்
முன்னமே செய்த ஒப்பந்தம்!!!

அவனை ஏசினாள்.
காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
"வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான்.
அவளோ எரிமலையானாள்.

அவள் கண்கள் சிவப்பானது.
அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என
ஆரம்பித்து தொடர்ந்தாள்.

என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...

துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து
மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம்
நாறி நாற்றமடிக்கும்....

இதுவும் ஒரு வியாபாரமே ....
ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள்
நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.

கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில்
நீயும் ஒரு வேசை தானே......

"வேசி" பெண்பால் என
எவன் சொன்னது??...

அவனருகே வந்து தாழ்ந்த குரலில்
மீண்டும் சொன்னாள்....

"உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...."


பேசிவிட்டு அறையிலிருந்து
விடைபெற்றாள்....

அவன் கண்ணிமைக்காமல் அவள்
சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.


தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!

----
நன்றி : இராசா ராம்----

Tuesday, July 12, 2011

புரியாத புதிர் ....

மௌனத்தால்
யுத்தம் செய்கிறாள்
அவள் ...
என்று பேசுவாள்
என மண்டியிட்டு
தவமிருக்கிறான்
அவன்...
கேள்விக்கனையால்
துளைத்தேடுக்கிறாள்
இவள் ...
எப்போதும் போல்
எதிரில் நிற்ப்பதை
தவிர்க்கிறான்
இவன் ...
அவன் நிறைய பேசுவான் ....
அவள் அமைதியாய் கவனிப்பாள்...
ஏக்கத்தோடு
"ஏதாவது பேசு..." என்பான் ...


இவள் நிறையவே பேசுகிறாள்
கேட்கத்தான் இவனுக்கு பொறுமை இல்லை .
"கொஞ்சம் நிறுத்துறியா ..."என்கிறான்
கோபத்தோடு .
ஏகப்பட்ட கேள்விகள் வரும்...
மௌனமாய் இருப்பான்...

எதிர்த்து பேசினால்
எப்போதுமே கண்ணீர் வரும் .
அவள் சிணுங்குவாள் ...

இவள் சீறுவாள் .....


பெண்களின் பலம்
கண்ணீர் ...
ஆண்களின் பலவீனமும்
அதுதான் .


இவன் நினைக்கிறான்
இவள் அவளாகவே இருந்திருக்கலாம் ...
இவள் நினைக்கிறாள்
இவன் அவனாகவே இருந்திருக்கலாம் ...

இரண்டும் தவறில்லை
அவன் என்பவன் காதலன் ..
இவன் என்பவன் கணவன் ..

அவள் என்பவள் காதலி
இவள் என்பவள் மனைவி...

எல்லாம் ஒன்று தான்
எதிபார்ப்புகள் சிதறுவதாலும்
எண்ணங்கள் சுருங்குவதாலும்
வருகின்ற உணர்வே
இதற்க்கெல்லாம் காரணம் ...


பேசியே கொல்வதும்...
பேசாமல் கொல்வதும் ...
பெண்களால் மட்டுமே முடியும்.

Wednesday, June 15, 2011

என்ன கொடும சார் இது ...

அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
அடிக்கடி சண்டை ....
விவாகரத்து வேண்டி
இருவரும் விண்ணப்பம் ...
குழந்தை யாருக்கென்று
நீதிமன்றத்தில் வழக்கு ...


தீர்ப்பு வந்தது ....

குழந்தை
அம்மாவிடம்
ஐந்து வருடம் ....

அப்பாவிடம்
ஐந்து வருடம் ....

தவிக்கும்
குழந்தையின் பெயர் ....

.
.
.
.
.
.

தமிழ் நாடு ....

Friday, April 29, 2011

கைபேசி கவிதைகள் ...

இறைவா ... !!!

அவளை
பார்க்கும் போது
சொல்ல நினைக்கிறேன் ...

அவள் பேசும் போது
சொல்ல நினைக்கிறேன் ...

அவள் முத்தம்
கொடுக்கும் போது
சொல்ல நினைக்கிறேன் ...

ஆனால்...

முடியவில்லை ...



கடவுளே !
சீக்கிரம் எனக்கு
பேசும் சக்தியை
கொடு ...

அவளை

"அம்மா " என்று
அழைக்க...

[ மூன்று மாத குழந்தையின் பிரார்த்தனை ...]

வேண்டும் வரம் ...



உன்னோடு பேச
ஒரு நிமிடம்
கிடைத்தாலும் போதும்...

கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டுமல்ல

என்னோடு இருக்கும்
கவலைகளும்

கரைந்து விடும் ...

பிரிவு ...
உண்மையான அன்பை
புரிந்து கொள்ளும்
ஒரு
அழகான சந்தர்ப்பம் தான்

"பிரிவு "...

பிரிவு என்பது
யாராலும்
மறக்க முடியாத
வலி !!!

நினைவு என்பது
யாராலும்
திருட முடியாத
பரிசு...!!!

புன்னகை ...

நிலவின் ஒரு துளி
அவள் புன்னகை
என்றேன்.

அவள் சிரித்த
பின்பு தான்
தெரிந்தது


அவள் புன்னகையில்
சிந்திய ஒரு துளி தான்
நிலவு என்று ...

நினைவுகள்...


நினைவுகள் என்பது
கடல்
அலை போல ...

அருகில்
வரும் போது
அதை
விட்டு விலக தோணும்...

தொலைவில்
இருக்கும் போது
ரசிக்க
தோணும் ...!!!

கண்ணீர்...!


அவள் அழும் போது
அவளை
விட
அவள்
கண்ணீர் தான்
அதிகமாக
அழுகிறது...

அவளின்
அழகான
கன்னத்தை
விட்டு
பிரிகிறோமே
என்று ...!

என் தவிப்பு ...!

என் தவிப்பு
அவளுக்கு

சிரிப்பாக
இருக்கலாம்...

அவளுக்கு
தெரியாது
அவள்
சிரிப்புக்காகத்தான்
நான்
தவித்து கொண்டு
இருக்கிறேன்
என்று ..!!!

அழகுதான் ...!

படிக்காத அம்மாவின்
கையெழுத்தும்

அழகுதான்
!!!

வாசலில்
கோலமாய் ...

என் தோழியும் என் காதலியும் ...

தோழியை கண்டதும்
நெருங்கி
அமர்வாள்
காதலி
...!

காதலியை
கண்டதும்
புன்னகைத்து

விலகி
நடப்பாள்
தோழி
... !!!

Saturday, April 9, 2011

ஏப்ரல் மாதம்...


ஏப்ரல் மாதம்...

பள்ளியானாலும் ...
கல்லூரியானாலும் ...
நட்போடு இணைந்திருப்பவர்கள்
கண்ணீரோடு விடைபெறும் மாதம் இது .

காதலில் இணைந்தவர்களுக்கும்
காலத்தால் பிரிந்தவர்களுக்கும்

மலரும் நினைவுகள் மனதில்
துளிர்விடும் மாதம் ....

எல்லோருக்கும்
எப்போதாவது
எதோ ஒரு பிரிவை
எண்ணத்தில் கொண்டு வரும் மாதம்

ஏப்ரல் மாதம் ...

இணைந்தவர்கள் பிரிவதும்
பிரிந்தவர்கள் இணைவதும்
இந்த மாதத்தின்

எழுதப்படாத நிகழ்வுகள் ..

தொடர்கதையாய் நீளும்

வாழ்நாளில்

சிறுகதையாய் ஒரு

வசந்த காலம் ...
எல்லோருக்கும் உண்டு .


விதி வழி வந்து

விழி
வழி கலந்து

கிளி மொழி
பேசும் - வெண்
மதியவள் நேசம்
கிடைத்ததும் இம்மாசம் ...



எப்போதும் என்மனவானில்
என்னோடு சிறகடிக்கும்
உன் நட்பான நினைவுகளுடன் ...

வாழ்த்துகிறேன்

உன் வளமான வாழ்விற்காய் ...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

Saturday, February 12, 2011

நெனச்சாலும் மறக்கமுடியறதில்ல...

ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,

இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா

கடங்கார professor கழுத்தறுப்பான்...

assignment எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,

கூத்து கும்மாள குறையுமில்ல,

எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா

H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்...

ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் - தவிக்க விட்டதில்ல...

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்

மாமா முறையா போட்ட மோதிரமும்

fees கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல ...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ

வேதனைய பாத்துப்புட்டோம்

'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...

பக்குவமா இத கண்டும் காணாம

நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு

சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,

வருஷங்கள் ஓடுது,

எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது

"Hi da machan... how are you?" வுன்னு...

தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜி,

அக்காவோட சீமந்தம்,

அம்மாவோட ஆஸ்த்துமா,

personal loan interest,

housing loan EMI,

share market சருக்கல்,

appraisal டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்

கம்பெனியில ஓசி phone இருந்தாலும்

கையில calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு

வரமுடியாமா போனாலும்,

அம்மா தவறின சேதி கேட்டதும்

கூட்டமா வந்தெறங்கி,

தோள் குடுத்து தூக்கி நிறுத்தி

பால் எடுத்தவரை கூட இருந்து

சொல்லாம போக வேண்டிய இடத்துல

செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்

வாசம் மாறி போகாது!

வருஷம் பல கழிஞ்சாலும்

வரவேற்பு குறையாது!

வசதி வாய்ப்பு வந்தாலும்

'மாமா' 'மச்சான்' மாறாது

Tuesday, February 8, 2011

நட்பினிலே !!!நட்பினிலே !!!


நண்பர்களாக
பழக வேண்டிய கட்டாயம் இல்லை....
நட்புக்கு அது தேவையும் இல்லை...
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே
சந்தித்துக்கொண்டோம்....



காலங்கள்
போடும் கோலத்தில்
நாமும்
ஒரு புள்ளியாக..
நம்மை
இணைக்கும் (நட்பு) பாலமாக
நாமே
இருக்கிறோம்..



இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...
இருந்தும் உறவாடினோம்...
பிரிந்தாலும் எங்கோ
எப்போதோ சந்தித்து கொள்வோம் ...





அப்போது நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..
அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...
மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்..
ஏன் என்று தெரியாது...
இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை......