Monday, December 27, 2010

நீ நீயாக இரு !!!


நீ நல்லதே செய்தலும்
நாளை உன்னை மறந்து விடுவார்கள் ...
எனினும் நல்லவனாய் இரு !!!

உண்மையாய் நீ இருந்தாலும்
உலகம் உன்னை ஏமாற்றலாம் ...
எனினும் உண்மையாக இரு !!!


நீ அள்ளி கொடுத்தாலும்
அவர்கள்
அதிருப்தி காணலாம் ...
எனினும்
வள்ளலாய் இரு !!!

கனிவோடு நீ இருந்தாலும்
கயவன்
என்று குறை கூறலாம் ...
எனினும்
கனிவாய் இரு !!!



மனநிறைவோடு நீ இருந்தாலும்
மற்றவர்கள் பொறாமை கொள்ளலாம் ...
எனினும் மனநிறைவோடு இரு !!!

வாழ்க்கை
என்பது
நீ
சாகும் வரை அல்ல ...
பிறர்
மனதில்
நீ வாழும் வரை ...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2011 !!!

Friday, November 19, 2010

வரம் நீ ... ஸ்வரம் நான்...

சிறகுகள் இல்லாத தேவதை நீயா?இல்லை,
சிறகுகள் கொண்டால் நீ தான் தேவதையா?
இரண்டுமே உனக்கு பொருந்தும் பெண்ணே ...


நாம் கொண்டது அன்பான நட்பா...
இல்லை ஆத்மார்த்த காதலா...
இரண்டும் கடந்து வேறேதும்
உன்னதமான ஒரு உணர்வா? !!!
எண் ஆசை சிறிது தான் ...
ஒரு நாள் முழுதும்
உன்னோடு வாழவேண்டும்
அதுவே எண்ஆயுள் காலமாய்
ஆக வேண்டும்...


இரவெல்லாம் உன்னோடு
பேசும் வரம் கிடைத்திருப்பின்...
எண் வாழ்வே இருளில்
கழிந்தாலும் கவலை மறந்திருப்பேன்...

காலம் என்பது கடலானால்
ஒவ்வொரு துளியும் உன்னோடு கழித்திடுவேன்...
காலம் என்பது துளியானால்
ஒவ்வொரு கடலையும் உன்னக்காக கழித்திடுவேன்...
கண்ணுக்குள் நீ இருப்பதால்
கருவிழி இருள் அகற்றவே
நான் இரவில் கூட
கண்விளித்திருக்கிறேன் ...
இதயத்தில் நீ இருப்பதால்,
அது இதமாக துடிக்கிறது...
அதுவும் நின்றால் கூட கவலை இல்லை..
நீ அமைதியை வாசம் கொள் கண்ணே...

உனைவிட சிறந்த நேசம் கொண்டதில்லை..
தாயிடம் கூட உன் பாசம் கண்டதில்லை...
அன்பாய் அரவணைத்தாய்..
ஆசையாய் பேசி வந்தாய்...
இனிமையாய் பழகி வந்தாய்..
இது போல் ஒரு சொந்தம்
இனிவரும் ஜென்மத்திலும்
காணப்போவதில்லை நான்...

கடவுள் ஏன் உலக சந்தோசங்கள்
அனைத்தையும் உன்னுருவில் காட்டினான்?
கண்ணீரோடு கழியும் எண் இரவுகளில்
கல்லறையின் சோகத்தில் வாட்டினான்...
நீ இல்லாத நேரங்களில்
அழுகிறேன் நான்...
ஒவ்வொரு துளி கண்ணீரும்
உனைத்தான் தேடி வருகின்றன...
உன் பிரிவு என்னை காயப்படுத்துகிறது...
எல்லா நேரங்களிலும் அல்ல,
நான் சுவாசிக்கும் போது மட்டும்...

அடுத்தொரு ஜென்மம் உண்டென்றால்...
உன் தாயாக நான் வேண்டும்...
இம்மையில் பெற்ற கடனில்
சிறு கவலமாவது நான்
திருப்பி தர வேண்டும்...

எண் இதயத்தின் பிரார்த்தனை:
இறைவா! எண் வாழ்வின் ஒவ்வொரு
சுவாசம் எடுத்துக்கொண்டு ...
அவளை நீ ஆசிர்வாதமாய் வாழ வை..

எண் ஆன்மாவின் பிரார்த்தனை:
இறைவா! இனிவரும் எண் ஜென்மத்தின்
சுவாசம் எடுத்துக்கொண்டு...
அவளை நீ ஆசிர்வதமே வாழ்வை..


எங்கும் தேடாமல்
எனக்கு கிடைத்த வரம் நீ..
எங்கேயோ தொலைத்து விட்டு
இரவெல்லாம் புலம்பும் ஸ்வரம் நான்...

Thursday, October 7, 2010

சொர்க்கம்!!!!!!!

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி




கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு
பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?




மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?


வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?


வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!

புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!


தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?


இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?



சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம்
கண்டவனடா!
Courtesy:N.Karthick-Hcl Engineer

Tuesday, September 14, 2010

அப்பாவின் பாசம்!

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா !
ஒரேயொரு
கை அழுத்தத்தில்
உணர்த்துவார் அப்பா !

முன்னால் சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப் பற்றி
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை ...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உரைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது ...

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என நண்பர்கள்
என்னிடம் சொல்லும்
போது தான்
எனக்கு தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என ...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை
அனுப்பி இருக்கிறாரோ
கடவுள்..?
சிறு வயதில்
கைபிடித்து நடை பயில
சொல்லிக் கொடுத்த அப்பா
எண்s கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார் ..?
லேசாக எண் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் இல்லை நான் ...
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாக சொல்லி
இருக்கிறேன்
அம்மா
அப்பா செல்லம் என ...
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

அம்மாவிடம் பாசத்தையும்

அப்பாவிடம் நேசத்தையும்

இன்றே உணர்த்துங்கள்

Saturday, September 11, 2010

ஜீமெயில் போன் கால்

வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால
இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம்
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும்
மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன்
செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின்
சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
ஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்த
செலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது
நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில்
நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு
வேண்டுமானாலும் போன் செய்யலாம். Call Phone என்பது
இல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை
கொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம்
மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம்
நிர்ணயத்துள்ளது. கட்டணம் பற்றிய விபரங்கள் :

ஒரு நிமிடத்திற்கு
இந்தியா : $0.06
யுனைடட் அரபு நாடுகள் : $0.19
மலேசியா : $0.02
பாகிஸ்தான் : $0.11
சிங்கப்பூர் : $0.02
சவுதி அரேபியா : $0.௧௯

http://gmail.com/call என்ற முகவரியை சொடுக்கி மேலும் தகவல்கள்
தெரிந்து கொள்ளலாம்.

Friday, August 20, 2010

விஜய் என்ன செய்ய வேண்டும்?




ஒவ்வொரு திரைப்படமும் ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறது. தமிழில் உருவாகும் திரைப்படங்களில் பெரும்பான்மையானவை பணம் பண்ணுவது என்ற நோக்கத்திற்காக எடுக்கப்படுபவை. அங்காடித்தெரு போன்றவை விதிவிலக்கு.

இவற்றிற்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தாலும், நடைமுறை வாழ்வில் இருக்கும் நிஜத்தை காட்சிப்படுத்தும் நோக்கத்தையும், நல்ல சினிமா என்ற விமர்சனத்தை பெற்றுவிட வேண்டும் ஆவலையும் இவ்வகைப் படங்கள் தன்னகத்தே கொண்டுள்ளன.

விஜய்யின் திரைப்படங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே நோக்கம் அதிக ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைப்பது, அதன் மூலம் அதிக லாபம் சம்பாதிப்பது என்பது மட்டுமே. திரைப்படங்கள் வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்ட இந்த‌ச் சூழலில் இதை ஒரு குற்றச்சாற்றாக யாரும் முன்வைக்க முடியாது என்பதே உண்மை.
இந்த நோக்கத்திற்கு ஏற்ப விஜய் படங்கள் தயா‌ரிப்பாளர்கள், திரையரங்குஉ‌ரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், கேன்டீன் நடத்துகிறவர்கள் என சகல தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்கும் அட்சய பாத்திரமாகவே இருந்து வந்தன. ர‌ஜினிக்குப் பிறகு அனைத்து தரப்பினரும் லாபம் பெற்றுத் தரும் நடிகர் என்று விஜய்யையே கை காட்டுகிறார்கள். ர‌ஜினி மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு படம் என்று சுருங்கியப் பிறகு விஜய்யின் முக்கியத்துவம் அபி‌ரிதமான அளவு வளர்ந்தது.

ஆனால் இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறஎன சமீபத்தில் விஜய் நடித்தப் படங்கள் அனைத்துமே வசூலில் திருப்தியை தரவில்லை. நடுவில் வந்த போக்கி‌ி மட்டும் விதிவிலக்கு. இந்த நிலைமைக்கு விஜய்யே முழு பொறுப்பு என்று கூறிவிட முடியாது.

என்றாலும் இந்த நிலையை மாற்றும் முழுப் பொறுப்பும், கடமையும், அதற்கான சாத்தியமும் விஜய்க்கு மட்டுமே உள்ளது. இனி வரும் படங்களில் அவர் சில மாற்றங்களை கண்டிப்பாக யோசித்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். பார்வையாளர்கள் விரும்பும் சில மாற்றங்கள் பற்றி பார்ப்போம்.

பூமியை பிளந்து கொண்டோ, வானத்தை கிழித்துக் கொண்டோ வரும் அறிமுகக் காட்சி, அதனைத் தொடர்ந்து வரும் அறிமுகப் பாடல் என்ற வழக்கத்தை விட்டொழிப்பது.

நான் அடிச்சா தாங்க மாட்டே, கை வச்சா யோசிக்க முடியாது என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பழக்கத்தை விட்டொழிப்பது.

ஆம்பள நான் அப்படிதான் இருப்பேன், பொம்பள நீ இப்படிதான் இருக்கணும் என்று பொம்பளைக்கு புத்தி சொல்லும் பழக்கத்தை மறந்துவிடுவது.

நூறு லேப் டாப்பை விற்று நூறு கோடி பணம் சம்பாதிப்பது போன்ற காமெடிகளை முடிந்தவரை தவிர்ப்பது.

என் பின்னாடி ஒரு சிங்கக் கூட்டமே இருக்கு என்று விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு படத்தில் இரை போடுவதை சுத்தமாக விட்டொழிப்பது.

ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும் போல இருக்கு என்று படத்திலும், நிஜத்திலும் அரசியல் பிரவேசத்துக்கு அடிபோடாமலிருப்பது.

காமெடி என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி வாய்ஸை மாற்றும் மிமிக்கி‌ரியை அடியோடு நிறுத்தி‌க் கொள்வது.

ஆறு பாட்டு, நாலு சண்டை என்ற பார்முலாவை முடிந்தவரை தவிர்ப்பது. இந்த பார்முலாவுக்குள் எந்தக் கதையைப் போட்டாலும் அது ஒரே கதையாகிவிடும் ஆபத்து அதிகமுண்டு.

அதிகம் அடிக்காத, அதிகம் ஆவேசப்படாத பூவே உனக்காக, காதலுக்கு ம‌ரியாதை, லவ்டுடே போன்ற படங்கள்தான் தனக்கு திருப்புமுனையாக அமைந்தது என்பதை உணர்ந்து அந்தவகைப் படங்களை அவ்வப்போதாவது செய்ய முயற்சி மேற்கொள்வது.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழி எல்லோர் வாழ்விலும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை பு‌ரிந்து கொள்வது.

பார்வையாளர்களின் இந்த பத்து எதிர்பார்ப்புக்கு விஜய் செவிகொடுக்க முன்வந்தால் தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டம் அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. செய்வாரா இளைய தளபதி?

Friday, July 9, 2010

இராவணன் - ஒரு பார்வை


ஊருக்கே தெரிந்த கதை, அதை முக்கிய கதாபாத்திரங்களால் இன்றைய காலத்திற்கேற்ப யாரும் இதுவரை அணுகாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் மணிரத்னம்.
முதல்பாதி நேரம்போனதே தெரியவில்லை, இரண்டாவதுபாதி முன்பாதியை போல வேகம் அதிகமில்லாவிட்டாலும் எந்த இடத்திலும் அலுப்பை தரவில்லை. பாமரனுக்கும் புரியக்கூடியவாறு திரைக்கதையை அமைத்துள்ளார். அத்தனை காட்சிகளிலும் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர்! தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே ஜில்லிடும் அளவு தத்ரூபமான ஒளிப்பதிவு.

விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு என்பனவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் ராவணனையும் ராவணனிலும் விட்டு வைக்கவில்லை, அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு அழகு குறையவே குறையாது போலிருக்கிறது. அப்படியே அதே 50Kg தாஜ்மஹாலாகவே இருக்கிறார். விக்ரமுக்கு பயப்படாமல் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம். அதே சமயம் மலை ஏறுவது, விக்ரமை தாக்குவது என படத்தின் மற்றொரு கதாநாயகன் போலவே வலம் வருகிறார். மணிரத்னம் படங்களில் நடிப்பதாலோ என்னவோ தெரியவில்லை இன்றைய நடிகைகள் அனைவரையும்விட ஐஸ் அழகையும் தாண்டி சிறப்பானவாராக தெரிகிறார்.
காதல் காட்சிகளில் 'அலைபாயுதே' மனம்; சண்டைக்காட்சிகளில் 'அக்னி நட்சத்திரம்'; இசையில் 'மௌன ராகம்'; கதையில் 'பகல் நிலவு'; உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் 'தளபதி'; பிரம்மாண்டத்தை பார்த்தால் 'உயிரே' உருகுது; திரைக்கதை அமைப்பில் 'பம்பாய்' தாக்கம்; இயக்கத்தில் 'நாயகன்'; இனி சினிமாவுக்கு ஆயுத எழுத்து. மொத்தத்தில் கொடுக்கலாம் ஒரு 'ரோஜா' பூச்செண்டு வாழ்த்த.., வழியனுப்ப..; ரெஸ்ட் எடுங்க 'குரு'!
ராவணன் - காதல் வன வாசம்
பாடல் வரிகளில் கவிஞர்

ராமன் கலந்த ராவண காதலை

கவிதையோடு
இலைமறை காயாக சொல்லி இருக்கிறார் ...
'உசுரே போகுதே ' பாடலில் நம்மை உருக வைக்கிறார் ....


உசுரே போகுதே

உசுரே போகுதே

உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

ஓ மாமன் தவிக்கிறேன்

மடிப்பிச்சை கேக்கறேன்

மனச தாடி என் மணிக்குயிலே
...

...
அக்கறைச் சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி

அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி
....

...
ஒடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்க ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேட்கல
...
...
என் மயக்கத்த தீத்துவச்சு மன்னிச்சுடும்மா
...
எட்ட இருக்கும் சூரியனை பார்த்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமும் போகல
...
...
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணுல ஒன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள

உன் நெனப்பு மனசுக்குள்ள

..........

Sunday, May 23, 2010

உதிர்ந்த ரோஜா ...


காதலை கற்று தந்தாய்....
கை பிடித்து வாழவும் கற்று தந்தாய் ...
தண்ணீரில் அழவும் கற்று தந்தாய்...
கண்ணீரோடு சிரிக்கவும் கற்று தந்தாய் ...
ஆனால்
எப்படி உன்னை நான் மறப்பதென்று
சொல்லாமல் சென்று விட்டாயே ??!!!!



நேசித்த நாட்களை நான்
கவிதைகளாக்கி வாசித்துப் பார்க்கிறேன் ......

கவிதைகள் மட்டுமல்ல - இனி என்
கண்ணீரும் எனை
உன்னோடு சேர்க்கப்போவதில்லை ...

என்னை நீ சந்திக்காமலேயே
இருந்திருக்கலாம் ...
இப்படி ஒருத்தி என் வாழ்வை
அழகாக்கி இன்று எனை
சிலையாக்கி சென்று விடுவாள்
என நான் சிந்திக்காமல் இருந்திருப்பேன் ...

நம் உறவுக்கு ஒரு அர்த்தம் உண்டென்றால்
நம் பிரிவுக்குள்ளும் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கும்..
நினைத்து பார்க்க பல நூறு
நிகழ்வுகள் என்னுள் இருக்க
என் இதயம் நொறுங்கும்
நம் பிரிவை சொல்லும் அந்த
ஒரு நொடி எனக்கெதற்கு ...???!!!

என்றாவது ஒரு நாள் உன்னை
சந்திக்க நேர்ந்தால்
உன் கண்ணில் நம் நேசம்
காண வேண்டும் - இல்லையெனில்
அன்றே
என் சுவாசம் மறக்க வேண்டும் !!!!

Monday, May 10, 2010

யுத்தமும் முத்தமும்


நாடுகளுக்கிடையே நடப்பது மட்டுமல்ல-சில நேரங்களில்
நம் உதடுகளுக்கிடையே நடப்பதும் யுத்தம் தான்.

கொடும் பாலைவனத்தில் அடிப்பது மட்டுமல்ல-இரவில்

நம் போர்வைக்குள் அடிப்பதும் வெயில் தான்.

கம்பிகளுக்கிடையே பாய்வது மட்டுமல்ல-எப்போதும்

உன் கண்களில் இருந்து பாய்வதும் மின்சாரம் தான்.


என் எல்லையற்ற சோகங்களுடன்
உன் மடியில் வந்து விழுகிறேன்-எழும் போது
பிறந்த குழந்தையாய் எழுகிறேன்.
கருவறையை மடியில் கொண்டவள்
நீ மட்டும் தான்.



என் நண்பன் கேட்டான்.
"உன்னவளை பற்றியே எப்போதும் எழுதுகிறாயே
அலுத்துப்போகவில்லையா உனக்கு" என்று.
நீ சுவாசித்து கொண்டே இருக்கிறாயே
உனக்கு அலுத்துவிட்டதா என்ன ?
என்றேன் நான்.



இது "விழா பேருந்து" என்றேன்
என் நண்பனிடம்
"இன்று எந்த விழாவும் இல்லையே".
என்றான் அப்பாவியாய்.
அவன் தலையில் தட்டி
"அதில் தான் என்னவள் போகிறாள்"
என்றேன் நான்


-------
நண்பன் அனுப்பியது ---------

காசில்லாத எளிய வைத்தியம்...

ஓவட் வெயிட் ஒபேஸிட்டி
டயட்டில் இருக்கிறேன்,
ட்ரெட் மில்லில் நடக்கிறேனென்று
அலட்டிக்கொள்ளுவதே
அன்றாட வழக்கமாச்சு...

மனசுக்குப் பிடித்ததைச்
சாப்பிடமுடியாமல்
மருத்துவரும் மருந்துமாகக்
கரைகிறது கைக்காசு...

உலகத்துத் தொலைக்காட்சி,
வீடெங்கும் வலைஆட்சி
சிறைப்பட்டுக் கிடக்கிறது
மனிதர்களின் உடலாட்சி...

அரைக்க தரைபெருக்க
துவைக்க துணிஉலர்த்த
துடைக்க சமைத்துவைக்க
சமைத்ததை சுத்தம்செய்ய,

அத்தனையும் செய்துவைக்கக்
கருவிகள் வந்திறங்க,
ஏறித்தான் போனது
எடையும் இயலாமையும்...

கால்விரலைப் பார்க்கவே
கஷ்டப் படும்படிக்கு
மேலெழுந்து நிற்கிற
மத்தள வயிற்றினால்,

இல்லாத நோயெல்லாம்
சொல்லாமல் வந்துவிட,
கொல்லாமல் கொல்லுகிறது
வல்லிய வேதனைகள்...

வேதனையைக் குறைக்க
விரதத்தைக் கடைப்பிடித்து,
சோதனை முயற்சியினால்
சுகமிழந்து போகாமல்,

உடலைக் குறைக்கின்ற
அவசியம் வந்துவிட்டால்,
வேலையைக்கூட்டிக் கொஞ்சம்
விளையாட்டைப் பெருக்கிவிட்டால்
உடல்சுமை கழிந்துவிடும்

இதுவே,
காசில்லாத எளிய வைத்தியம்

Thursday, April 22, 2010

TEAM = Together Everyone Achieve More





This is the real meaning of team work

ஏன் இந்த பிரிவு ....


நமக்குள் என்றும்
பிரிவுகள் இல்லை
என்றுதானே
நொடிக்கொருமுறை
சொல்லிக் கொண்டிருந்தாய்

இன்று ஏன் ? எப்படி?
யார் சொல்லி?
எனை பிரிந்து சென்றாய்

நமக்குள் ஏன்
இப்படி ஒரு பிரிவு?

என் மனதை
புரிந்து கொள்ள
முயற்சிக்காமலே
என்னை பிரிந்து சென்றாயே!!!

உன் பிரிவை
நினைக்கும் போதெல்லாம்
உயிர் போகும் வலியையே
உணர்கிறேன்

நம் நினைவுகள் அழகானவை
நம் பேச்சுகள் சுகமானவை
நம் நட்பு இன்பம் தருபவை என
உன்னால் என் இதயத்தில்
பதிய செய்துவிட்டு

இன்று இவை ஏதும்
உனக்கில்லை என்று சொல்லி
வேண்டுமென்றால்
என் பிரிவை வைத்துக்கொள்
என்று பரிசளித்து
சென்று விட்டாயே!!!

நீ தந்த உன் நினைவுகள்
இன்றும் என்னுள்
அப்படியே இருக்கிறது

இந்த பிரிவு என்பது
உனக்கு மட்டும்தான்
என்னுள் என்றும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உனக்கு அல்ல!!!

எல்லோருக்கும்
எல்லோரும் இருக்கிறார்கள்
எனக்கு மட்டும் ஏன்
நீ இல்லாமல் இருக்கிறாய்?

Tuesday, April 20, 2010

கவிதைக் கொத்து......

விலைவாசி ஏற்றம்
குருவியையும் விட்டுவைக்கவில்லையோ....
சின்னதாய் கட்டியது கூடு

இவன் பசுவின் பாலைக் கறந்தால்
" பசு பால் தரும்" என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
"காகம் வடையைத் திருடிற்று''
இப்படியாக மனிதன்.


சிலருக்கு பனி துளி புடிக்கும்,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால், யாரையாவது உண்மையாக 'நேசித்து' பாருங்கள்..
கண்ணீர் துளி கூட பிடிக்கும்

நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ எண் எதிரில் இருக்கும் தூரம் குறைவுதான்
அனால் நிலவை காண முடிந்த என்னால்
உன்னை காண முடியவில்லையே...

அழகுதான் ,
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி இருந்த
அவள் பாத சுவடுகள்.


தேடிக்கொண்டிருக்கிறேன்..!!
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
நான் காணும் ஆயிரம் ஆயிரம் முகங்களில்..!!
இன்னும் அறிமுகமாகாத
என்னவளின் முகத்தை...!!!



விபத்து பகுதி
" வேகமாக" செல்லவும்
" மகளிர் கல்லூரி "


நீ பறிக்க வருவாய் என்று
முள்ளில்லாமல் பூத்தது
ரோஜாப்பூ..

வெற்றி’யை விரும்பும் நமக்கு
தோல்வி’யை தாங்கும் மனம் இல்லை…!
தோல்வி’யை தாங்கும் மனம் இருந்தால் அதுவும்
ஒரு வெற்றி’ தான்.!

Tuesday, February 16, 2010

விழித்தெழு தமிழா !!!



--------------நண்பனின் மின்னஞ்சலிலிருந்து-------------------------

Friday, January 29, 2010

பொங்கலுக்காய் இதயம் தயாரிப்போம்


கரும்பு விழாக் கரையோரம்...

பொங்கல்...

பூக்களை மட்டுமே
பூஜிக்கும் பூமியில்
வேர்களுக்குக்
கிளைகள் எடுக்கும்
கலை விழா.

மோதிரங்களின் தாலாட்டில்
விரல்களை
மறந்து விட்டவர்களுக்கு
பாதங்கள் நடத்தும்
பாராட்டு விழா.

தனக்குத் தானியம் தந்த
வயல்களுக்கு
வரப்புகள் விரிக்கும்
வாழ்த்து விழா.

பணப்பை கள் பார்க்கத் தவறிய
கலப்பைகளுக்கு,
கிராமச் சாலைகள் நடத்தும்
கோலாகல விழா.

நாடுகள்
கிரீடப் போட்டிக்கு
கவசங்களோடு அலைய,
இங்கே
மாடுகளின் தலையில்
முடிசூட்டு விழா நடக்கும்.

தங்கத் தட்டுகளை வெறுத்து
செங்கல் மீதில்
திங்களைப் பார்த்து
பொங்கல் பானை
பொங்கிச் சிரிக்கும்.

நம்பிக்கைகளை நன்றாகிய
பச்சைக்கு
கும்மிக்கைகள் ஒன்றாகி
குதுகெலமாய் நன்றி சொல்லும்.

நல்ல நிலத்தில்
விதை விழுந்தால்,
ஆயிரம் விதைகள் பயிராகும்
என
களஞ்சியங்கள் ஒப்புக்கொண்டு
கையெழுத்திடும்.

வாருங்கள்,
அனுபவக் கலப்பைகள்
உழுது முடித்த உள்ளத்துள்
நல்லெண்ண விதைகளை
ஆழமாய் ஊன்றுவோம்.

இன்னோர் பொங்கலுக்காய்
இதயம் தயாரிப்போம்




சிந்தையில் தை.


இதோ தை மாதக் குதிரையில் வருகிறது திருவிழா. வாசல்களே, உங்கள் குப்பைகளைக் கழித்து கோலத்தின் முத்ததுக்காய் குளித்துக் காத்திருங்கள். சுவர்களே உங்கள் அழுக்கு ஆடைகளை சுண்ணாம்பு வேட்டிகளால், சுற்றி மறையுங்கள். கொட்டில் மாடுகளே வாருங்கள், உங்கள் தொட்டில் முற்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. புதிய பானைகளே பொறுத்திருங்கள், உங்கள் உள்ளம் பொங்கி வழிய இதோ நாள்காட்டிகளும் பட படக்கின்றன. வயல்காற்றே வாருங்கள் எங்கள் வியர்வையின் ஈரத்தை உணவின் சாரமாக மாற்றியது நீங்கள் தான். திண்ணையில் வந்தமருங்கள். பூமித் தாயே பெருமிதம் கொள், நீ உமிக்குள் ஒளித்து வைப்பதை இன்னும் எங்கள் கணிணிக் கூடங்களால் தயாரிக்க இயலவில்லை. எல்லோரும் வாருங்கள், மனம் பொங்க மகிழுங்கள் இது தமிழர் கலாச்சாரத்தின் தனி அடையாளம். அறுவடையின் ஆனந்தத்திலும், வறுமையின் வேதனையிலும், நன்றி மறக்காத என் தமிழ்த் தலைமுறையின் தன்மான அடையாளம். கலாச்சார வேர்களை ஆழ உழுது வை. வயலில்லையேல் செயலில்லை என்பதை சிந்தையில் தை. இதோ வந்து விட்டது தை.



பொங்கல் வாழ்த்துக்கள்:

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது

வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது

மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய

அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்







எங்கள் ஊர் பொங்கல்

ஞாபக இழைகளைச் சிக்கெடுத்து
எங்களூர்ப் பொங்கலை
ஓர் நினைவுச் சடையாய்ப்
பின்னிப் பார்க்கிறேன்

அன்பைப் பெருக்கி கண்களில் சுருக்கி
ஆழ உயிர்க் குரலில்
'அம்மா' வென்ற கதறலோடு
சாம்பல்நிறப் பசுமாடு
திண்ணை மெழுகிப்போட
சாணம் இட்டு நிற்கும்
சுவரோர நிழலில்

எத்தனையோ முறை
கீறிக்கீறிக் காயப்படுத்தினாலும்
கொத்திக்கொத்திப் புண்ணாக்கினாலும்
அத்தனை முறையும்
சிரிக்கும் அன்புத் தாயாய்
அமுதள்ளி ஊட்டும் நிலம்

சோற்றுத் தட்டின்
ஓரங்களாய் ஈரம் மிளிர
நனைந்து கிடக்கும் வரப்புகளில்
நடப்பேன் நாளெல்லாம்
கால்கள் நொந்ததில்லை

வேண்டும் என்று எண்ணி
வானம் பார்க்கும் போதெல்லாம்
என் வேண்டுகோளுக்காகவே
காத்திருக்கும் மழைத்தேவதை
நெஞ்சு நெகிழ வீழ்வாள்
மண்வாசம் சுகமாக எழும்ப

வேட்டுச் சத்தம் கேட்டதோடு
வீரிட்டு ஓடும்
மாட்டுவண்டிக் கொண்டாட்டத்தை
விழிகளில் அச்சம் கிடுகிடுக்க
பதுங்கி நின்று வேடிக்கை பார்த்த
அந்தப் பழைய நாட்கள்

முகத்தை
வெட்டிவெட்டி நடக்கும்
குங்குமப் பொட்டுக் குமரிகள்
வட்டவட்டமாய் வந்து கும்மியிட்டு
'குடுடா காசு' என்று மதுச்சிரிப்போடு
மல்லுக்கு நிற்கும்போது
பருவ நெருப்புச் சிறகுகள் விரித்த
கல்வெட்டுப் பொற்பொழுதுகள்

இன்றெல்லாம்
நகர மறுக்கும் நகர வாழ்க்கை

தினந்தோறும்
நீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்
தையல் போடவும் வழியற்றுப்
பிதுங்குவதுமாய் நாட்கள்

பொங்குது பொங்குது பொங்கல்
என் கண்களில் பொங்குது பொங்கல்........