ஓவட் வெயிட் ஒபேஸிட்டி
டயட்டில் இருக்கிறேன்,
ட்ரெட் மில்லில் நடக்கிறேனென்று
அலட்டிக்கொள்ளுவதே
அன்றாட வழக்கமாச்சு...
மனசுக்குப் பிடித்ததைச்
சாப்பிடமுடியாமல்
மருத்துவரும் மருந்துமாகக்
கரைகிறது கைக்காசு...
உலகத்துத் தொலைக்காட்சி,
வீடெங்கும் வலைஆட்சி
சிறைப்பட்டுக் கிடக்கிறது
மனிதர்களின் உடலாட்சி...
அரைக்க தரைபெருக்க
துவைக்க துணிஉலர்த்த
துடைக்க சமைத்துவைக்க
சமைத்ததை சுத்தம்செய்ய,
அத்தனையும் செய்துவைக்கக்
கருவிகள் வந்திறங்க,
ஏறித்தான் போனது
எடையும் இயலாமையும்...
கால்விரலைப் பார்க்கவே
கஷ்டப் படும்படிக்கு
மேலெழுந்து நிற்கிற
மத்தள வயிற்றினால்,
இல்லாத நோயெல்லாம்
சொல்லாமல் வந்துவிட,
கொல்லாமல் கொல்லுகிறது
வல்லிய வேதனைகள்...
வேதனையைக் குறைக்க
விரதத்தைக் கடைப்பிடித்து,
சோதனை முயற்சியினால்
சுகமிழந்து போகாமல்,
உடலைக் குறைக்கின்ற
அவசியம் வந்துவிட்டால்,
வேலையைக்கூட்டிக் கொஞ்சம்
விளையாட்டைப் பெருக்கிவிட்டால்
உடல்சுமை கழிந்துவிடும்
இதுவே,
காசில்லாத எளிய வைத்தியம்
Monday, May 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment