அவளை பார்க்கும் போது
சொல்ல நினைக்கிறேன் ...
அவள் பேசும் போது
சொல்ல நினைக்கிறேன் ...
அவள் முத்தம்
கொடுக்கும் போது
சொல்ல நினைக்கிறேன் ...
ஆனால்...
முடியவில்லை ...

கடவுளே !
சீக்கிரம் எனக்கு
பேசும் சக்தியை
கொடு ...
அவளை
"அம்மா " என்று
அழைக்க...
[ மூன்று மாத குழந்தையின் பிரார்த்தனை ...]
வேண்டும் வரம் ...

உன்னோடு பேச
ஒரு நிமிடம்
கிடைத்தாலும் போதும்...
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டுமல்ல
என்னோடு இருக்கும்
கவலைகளும்
கரைந்து விடும் ...
பிரிவு ...
உண்மையான அன்பைபுரிந்து கொள்ளும்
ஒரு
அழகான சந்தர்ப்பம் தான்
"பிரிவு "...
பிரிவு என்பது
யாராலும்
மறக்க முடியாத
வலி !!!
நினைவு என்பது
யாராலும்
திருட முடியாத
பரிசு...!!!
புன்னகை ...

நிலவின் ஒரு துளி
அவள் புன்னகை
என்றேன்.
அவள் சிரித்த
பின்பு தான்
தெரிந்தது
அவள் புன்னகையில்
சிந்திய ஒரு துளி தான்
நிலவு என்று ...
நினைவுகள்...

நினைவுகள் என்பது
கடல் அலை போல ...
அருகில் வரும் போது
அதை விட்டு விலக தோணும்...
தொலைவில் இருக்கும் போது
ரசிக்க தோணும் ...!!!
கண்ணீர்...!

அவள் அழும் போது
அவளை விட
அவள் கண்ணீர் தான்
அதிகமாக அழுகிறது...
அவளின் அழகான
கன்னத்தை விட்டு
பிரிகிறோமே என்று ...!
என் தவிப்பு ...!

என் தவிப்பு
அவளுக்கு
சிரிப்பாக இருக்கலாம்...
அவளுக்கு தெரியாது
அவள் சிரிப்புக்காகத்தான்
நான் தவித்து கொண்டு
இருக்கிறேன் என்று ..!!!
அழகுதான் ...!
படிக்காத அம்மாவின் கையெழுத்தும்
அழகுதான்!!!
வாசலில் கோலமாய் ...
என் தோழியும் என் காதலியும் ...

தோழியை கண்டதும்
நெருங்கி அமர்வாள்
காதலி ...!
காதலியை கண்டதும்
புன்னகைத்து
விலகி நடப்பாள்
தோழி ... !!!
நெருங்கி அமர்வாள்
காதலி ...!
காதலியை கண்டதும்
புன்னகைத்து
விலகி நடப்பாள்
தோழி ... !!!
