
நாடுகளுக்கிடையே நடப்பது மட்டுமல்ல-சில நேரங்களில்
நம் உதடுகளுக்கிடையே நடப்பதும் யுத்தம் தான்.
கொடும் பாலைவனத்தில் அடிப்பது மட்டுமல்ல-இரவில்
நம் போர்வைக்குள் அடிப்பதும் வெயில் தான்.
கம்பிகளுக்கிடையே பாய்வது மட்டுமல்ல-எப்போதும்
உன் கண்களில் இருந்து பாய்வதும் மின்சாரம் தான்.
என் எல்லையற்ற சோகங்களுடன்
உன் மடியில் வந்து விழுகிறேன்-எழும் போதுபிறந்த குழந்தையாய் எழுகிறேன்.
கருவறையை மடியில் கொண்டவள்
நீ மட்டும் தான்.
என் நண்பன் கேட்டான்.
"உன்னவளை பற்றியே எப்போதும் எழுதுகிறாயே
அலுத்துப்போகவில்லையா உனக்கு" என்று.
நீ சுவாசித்து கொண்டே இருக்கிறாயே
உனக்கு அலுத்துவிட்டதா என்ன ?
என்றேன் நான்.
இது "விழா பேருந்து" என்றேன்
என் நண்பனிடம்"இன்று எந்த விழாவும் இல்லையே".
என்றான் அப்பாவியாய்.
அவன் தலையில் தட்டி
"அதில் தான் என்னவள் போகிறாள்"
என்றேன் நான்
------- நண்பன் அனுப்பியது ---------
:) நல்லா இருக்கு.
ReplyDelete