Friday, July 17, 2009

காதலின் மறுபெயர் கவிதை[சில துளிகள்...]

என் மாணவன் ஒருவனின் கவிதை தொகுப்பிலிருந்து சில துளிகள்...
அவன் இதை ரசித்து எழுதினானா இல்லை அனுபவித்து எழுதினானா
என்று ஆராய்ந்து [ நான் ஒரு ஆசிரியனாயிற்றே ] பார்க்க எனக்குவாய்ப்பளிக்காமல் என்னை ஒரு ரசிகனாய் ரசிக்க மட்டுமே செய்த
அவன் திறமைக்கு என் பாராட்டுக்கள் ....

அவன் அனுமதியோடு , சில வரிகள் இங்கே...
...
...
"நீ தலை சாய்த்து உன்
தோழிகளிடம் பேசும் போதே
சாய்ந்து விட்டது என் நெஞ்சம் ...!"
...
...
"எனக்கு அத்தனை நாள் பிடித்து
வந்த ஜன்னல் ஓரம் [பேருந்தில்]
அன்று
பிடிக்கவில்லை ...!

நீ ஜன்னல் வழி
தென்றலை ரசித்தாய் !

நான் தென்றல் வழி கலைந்தாடும்
உன் கூந்தலை ரசித்தேன் ...!"
...
...
கரு மேகங்களை ஒன்று கூட்டி
கட்டி வைத்திருந்தாய் ....!
அதுவும் விளையாடியது ... அழகாய்
தென்றலிடமும் ,
உன் பின்னால் அமர்ந்திருந்த
என்னிடமும் ..."


[ இன்னும் தென்றல் வீசும்.....]

[ இன்றைய மாணவர்களின் பல திறமைகள் இன்னும் அதிகமாய் வெளி வரும் ...

சரியான வழிகாட்டுதலும் ஊக்கமும் அவர்களுக்கு கிடைத்தால் ...]

2 comments:

  1. ந‌ல்லா இருக்கு, வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. நன்றி நண்பா !! எல்லாம் உன் வழிச் சிதறல்கள் தொட்டு தொடர்கிறேன்...

    ReplyDelete