வாழ்க்கை என்பது வான வில் மட்டுமல்ல ,
இடி மின்னல்களும் இணைந்ததுதான் ...
இரண்டையும் பார்க்க கற்றுக்கொள் ...
வாழ்க்கை என்பது பூக்களோடு இணைந்த
போர்க்களமும் தான் , புரிந்து கொள் ...
வாழ்க்கை இன்பச் சுற்றுலா அல்ல ,
உன்னை வழி நடத்த ...
அதுஒரு தேடலின் பயணம் ...
உனக்கான பாதையை நீ தேர்ந்தெடு ...
காலம் மட்டுமே உனக்களிக்கப்பட்ட ஓர் அஸ்திரம்,
அது உனக்கெதிராய் திரும்பும் முன்
உபயோகிக்க கற்றுக்கொள் ....
அறுவடையை வைத்து உன் நாட்களை முடிவு செய்யாதே ,
அது நீ விதைப்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படும்...
சோதனைகள் தான் உனக்கு தரப்பட்ட
சாதனைகளுக்கான சந்தர்ப்பங்கள் ...
துணிவை துணையாக கொள் ...
தோல்விகளை கண்டு துவண்டு விடாதே ,
தோல்வியில் நீ எதை இழந்தாலும் ,
அது கற்பித்த பாடத்தை மட்டும் தொலைத்து விடாதே ...
உன் உதடுகளில் புன்னகை தவழும் வரைதான்
உன்னுள் நம்பிக்கை உறுதியுடன் இருக்கும் ...
முட்டை உடை பட்டால் உனக்கு உணவு மட்டுமே ,
அடை காக்கும் பொறுமை இருந்தால் ,
அது உன்னோடு உறவாடும் ஒரு ஜீவன் ...
அவசரம் அப்புறப்படுத்து...
கோபம் குறைக்கப் பழகு...
பொறாமை பொசுக்கி விடு...
இயலாமை இல்லாதாக்கு ...
அன்பை ஆயுதமாக்கு ...
பொறுமையை கவசமாக்கு ...
நேர்மையை சுவாசமாக்கு...
உண்மையை உணவாக்கு ...
மலைகளில் ஏறிப்போ ...
நதிகளில் நீந்திப்போ ...
காடுகளை கடந்து போ ...
பள்ளத்தாக்கில் பயணம் கொள் ...
உலகத்தை பார்க்காதே ...
உலகம் உன்னை பார்க்கச்செய் ...
மூச்சிருக்கும் வரை முயற்சி செய் ...
உன் அனுபவத்தை
வரும் தலை முறைக்கு பாடமாக்கு...
உன்னால் முடியும் என்று முதலில் நீ நம்பு..
உன்னால் முடியாதென்பது
உன் ஆயுளை உலக ஆயுளுக்கு
இணையக்குவது
என்பது மட்டுமே என்றிருக்கட்டும் ...
Thursday, July 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Hello sir,
ReplyDeleteIts Nice lines...
Thanks
Arulkumar(Leo Friend)