Friday, August 7, 2009

நான் சமாளிச்சுக்கிறேன் பா ...


"அப்பா !


நம்ம வீட்ல கார் இருக்கு ...


கார்டன் இருக்கு ...


பெரிய பிஷ் டேங்க் இருக்கு ...


பிரிட்ஜ் கூட இருக்கு ...


வீடியோ கேம்ஸ் இருக்கு ...


மைக்ரோ ஓவென்ஸ் கூட இருக்கு...


நல்ல டால்ல்ஸ் இருக்கு ...


நெறையா பால்ல்ஸ் கூட இருக்கு ...


ஸ்விம்மிங் பூல் இருக்கு ...


சர்வன்ட் ஆள் கூட இருக்காங்க டாடி ....


ஆனா அவ்வளோ பேர் இருக்குற அந்த ஆஸ்டல் ல


இதுல எதுவுமே இல்லப்பா ....


ஆனாலும் அவங்ககூட இருந்தப்போ


ரொம்ப ஜாலியா இருந்துச்சுப்பா ....


பேசாம நம்ம வீட்ல இருக்குறதெல்லாம் அவங்களுக்கு கொடுதுரலாம்ப்பா ....


எனக்கு எதுவுமே வேண்டாம் ...- அதுக்கு பதிலா


பாசமா இருக்கிற அந்த 'பாட்டிய' மட்டும்


நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரலாம்ப்பா ...


ப்ளீஸ் பா ....


மம்மிட்ட நான் சொல்லிக்கிறேன் பா ...


யு டோன்ட் வொர்ரி பா ... " - என்ற


என் பையனின் வார்த்தைகளில்


வீட்டிற்கு செல்லும் எண்ணமே


எனக்கு மரண வழியை தந்தது ....



No comments:

Post a Comment