பால் பருவத்தில் பெற்றவள் மார் மிதித்து
மனம் மகிழ்ந்த என் மழலை லயனம்...
பள்ளிப் பருவத்தில் தோழனுடன் சண்டையிட்டு
பின்பு அவன் தோள் மீது கை போட்ட நடை பயணம் ...
பருவ வயதில் மங்கை அவள் மீது ஈர்ப்பு கொண்டு
பருக்களை அள்ளிக்கொண்ட என் எழில் முகம் ...
கல்லூரி நாள்களில் என் கிறுக்கல்களையும் ஒப்பாரிகளையும் கூட
உள்ளன்போடு ரசித்து உற்சாக படுத்திய என் சிநேகம் ...
தங்கையாய் பழகியவள் என் நண்பனுடன் காதல் வயப்பட்ட போது
நட்பையும் மறந்து பாசத்தில் பிரளயம் செய்த என் கோபம்...
தோழியின் தோழனை தோழனாய் ஏற்க முடியாமல்
உள்ளுக்குள் மருகி உள்ளதை மறைத்த சோகம்...
கல்லூரி அரசியலில் கலங்கிப்போய் கவிழ்ந்த போது
எனக்கு ஆறுதலாய் இருந்த என் தோழியின் நேசம் ...
கடைசி நாளில் மட்டுமே என் கண்களில் நீர் கொள்ளச்செய்து
கவலைமறக்கச்செய்த என் கல்லூரி நாட்கள் ....
இனி வருமோ என் வாழ்வில் ...
திரும்பிப்போக வழியில்லாததால் ,
திரும்பிப்பார்க்கிறேன் ....
Wednesday, July 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அருமை நண்பா !
ReplyDeleteThanks bala
ReplyDelete